Monday, October 15, 2018

கொத்தமல்லி பாத்/ கொத்தமல்லி சாதம்

வணக்கம் நண்பர்களே!!

இது என்னுடைய முதல் தமிழ் ப்லோக்... வெகு நாட்களுக்கு பிறகு இவ்வாறு முழுமையாக தமிழில் எழுதுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இன்று நான் தங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போவது ஒரு சமையல் ப்லோக்த்தான்.

கொத்தமல்லி வைத்து எவ்வாறு ஒரு எளிமையான சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

1. ஒரு கை அளவு கொத்தமல்லி இலைகள்.
2. இரண்டு சில் தேங்காய்
3. ஒரு பச்சை மிளகாய்
4. எண்ணெய் சிறிதளவு
5. சீரகம் சிறிதளவு
6. ஒரு கப் அரிசி (1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்தது )
7. உப்பு சுவைக்கேற்ப
8. இரண்டு கப் நீர்

செய்முறை:

கொத்தமல்லி, தேங்காய் மற்றும் பச்சை மிளகாவை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்தவுடன் சிறிது சீரகம் சேர்த்து வறுக்கவும்.

பிறகு அரைத்துவைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை பொகும்வரை வதக்கிக்கொள்ளவும். இப்பொழுது நாம் ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதில் 2 கப் அளவு நீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு அரிசி வேகும்வரை காத்திருக்கவும். அரிசி வெந்தவுடன் சுவையான கொத்தமல்லி பாத் தயாராகிவித்தது.

இந்த உணவை உங்கள் இல்லத்தில் செய்து, குடுபத்தினருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்...

மீண்டும் ஒரு உணவு வகையுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஏன் தமிழில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.6

No comments:

Post a Comment

கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை

மாலை வணக்கம் நண்பர்களே, இன்று நாம் காணப்போகும் உணவு வகை மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமாக நாம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். இ...